Monday - Friday, 9:00am- 5:00 pm
+91 90038 89813
Nagapattinam
இந்த டிரஸ்ட் ன் நோக்கமானது சமூகத்தால் தாழ்த்தப்பட்ட பறையர் மற்றும் பழங்குடி இன மக்களை ஒருங்கிணைத்து , சமூகத்தில் சமமாக , விழிப்புணர்வு பெற்று சுய முன்னேற்றம் அடைந்து சுய மரியாதையுடன் வாழ பாடுபடும் .
கல்வி , கல்வி மூலம் வேலை வாய்ப்பு பெற்றிட, சுய தொழில் பயிற்சி பெற்று சுய தொழில் முனைவோராகி , பொருளாதார முன்னேற்றம் பெற ,பொருளாதார தன்னிறைவு மூலம் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சி காண முடியும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது .
இச்சமூக மக்களின் கைவிடப்பட்ட சிறுவர்கள் ,சிறுமிகள் மற்றும் வயதானவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் செய்யப்படும் .
அவ்வாறு இருக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்டுஉணவுக்கு ஏங்கும் சூழலில் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் அமைத்து தர பாடுபடும் .
இம்மக்கள் வாழ்நாளில் விவசாய கூலிகளாக , வீட்டு வேலைசெய்பவராக ,செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக,சித்தலாக ,கழிப்பிட பணியாளராக ,தகனம் செய்பவராக, இன்னும் பல அடிமட்ட பணி செய்யும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற பாடுபடும் .
இந்த இன மக்கள் இம்மாதிரி இழிதொழில் செய்வதால் மனம் நொந்து குடிக்கு அடிமையாகி தான் பெரும் சொற்ப வருமானத்தையும் குடித்தே அழித்துவிடுகிறார்கள் . அவர்களை இந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு பெற உதவி செய்ய பாடு படுவோம்.